ADDED : அக் 25, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் அடர் பனிமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்த நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.
வடகிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் பனிமூட்டம் சூழ்ந்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியதால் ஸ்வெட்டர் அணிந்து பொதுமக்கள் நடமாடினர். வெயில் இல்லை. லேசான சாரல் அவ்வப்போது பெய்தது. சுற்றுலா பயணிகள் இன்றி நகர் வெறிச்சோடியது.

