/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாக்கத்தில் துறை அதிகாரிகள்; குடகனாற்றில் கலக்கும் ஆலை கழிவுகள்; விவசாயம், நிலத்தடி நீர் மாசால் பாதிப்பு

ADDED : நவ 23, 2024 05:44 AM

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகி, ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாறு, இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக, விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்தாற்றின் குறுக்கே அழகாபுரியில் குடகனாறு அணையைக் கட்டி உள்ளதால் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர் பாசனம் பெறுகிறது.
இந்த ஆற்றில் சில ஆண்டுகளாக ஆலை கழிவுகள் கலப்பதால் நீரின் நிறம் முற்றிலுமாக மாறுபட்டு கால்நடைகள் கூட குடிக்க முடியாத அளவிற்கு குடகனாற்றில் சென்று அணையில் தேங்கி நிற்கிறது.
இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினாலும் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாகவும், அந்த நீரில் இறங்கி தண்ணீர் பாய்ச்சினால் கூட இரண்டு கால்களிலும் அரிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தொடர் புகார் எழுப்பி வருகின்றனர்.
குடகனாற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் லட்சுமணன்பட்டியில் உள்ள தடுப்பணையில் வேகமாக விழுவதால் நுரை கிளம்பி நிற்பது நீண்ட காலமாக தொடர்கிறது. குடகனாற்றின் வழியோர பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவு நீரை தேக்கி வைப்பதற்கான மாபெரும் தொட்டிகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தாலும் முறையான சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் திறந்து விடுவதே இதற்கு காரணம் என்ற குமுறலும் தொடர்ந்து ஒலிக்கத்தான் செய்கிறது.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீரை திறந்து விடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.