/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எத்தனை அணிகள் சேர்ந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது துணை முதல்வர் உதயநிதி உறுதி
/
எத்தனை அணிகள் சேர்ந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது துணை முதல்வர் உதயநிதி உறுதி
எத்தனை அணிகள் சேர்ந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது துணை முதல்வர் உதயநிதி உறுதி
எத்தனை அணிகள் சேர்ந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது துணை முதல்வர் உதயநிதி உறுதி
ADDED : அக் 09, 2025 09:35 PM
வேடசந்துார்:''பா.ஜ.,வுக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். அவர்களுக்கு புதிய அணிகள் நிச்சயமாக கிடைக்கும். எத்தனை அணிகள் சேர்ந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது,'' என, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது : தி.மு.க., ஆட்சியில் முதல் கையெழுத்தே மகளிருக்கானது தான். மகளிர் இலவச பஸ் பயணத்தில் நான்கு ஆண்டுகளில் 800 கோடி பேர் பயணித்துள்ளனர். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக, பொருளாதாரத்தில் வலிமை அடைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்ற பல்வேறு கட்சிகள் திட்டங்களை தீட்டி வருகின்றன. எத்தனை அணிகள் சேர்ந்து வந்தாலும் தி.மு.க.,வை வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு தி.மு.க., தொண்டரும் உங்களை ஓட ஓட விரட்டுவர் என்றார்.
திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதாவது: எதிர்க்கட்சி அ.தி.மு.க., இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என முதலில் கூறினர். பின் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி என அறிவித்தனர். சென்னையில் ராயப்பேட்டையில் அ.தி.மு.க., கட்சி அலுவலகம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகம் தான் அ.தி.மு.க., கட்சி அலுவலகம் என நினைக்கிறேன். அந்தளவிற்கு அ.தி.மு.க.,வை பா.ஜ.,விடம் அடகு வைத்து விட்டனர்.
தி.மு.க.,வில் இளைஞர், மகளிர், மாணவர் என 27 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா, செங்கோட்டையன் என பல அணிகள் உள்ளன. சொந்தக்கட்சி பிரச்னைக்கு அடுத்தக்கட்சியிடம் பஞ்சாயத்து பேசும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.,தான் என்றார்.
அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.