/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் கோப்பை மாநில பூப்பந்தாட்ட போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசு துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

ADDED : அக் 09, 2025 05:34 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான மாநில பூப்பந்து போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
முதல்வர் கோப்பைக்கான மாநில பூப்பந்து விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. 38 மாவட்டத்தை சார்ந்த 760 வீரர், வீராங்கனைகள், அணி மேலாளர்கள் கலந்து கொண்டனர். ஆண், பெண் இரு பிரிவுகளில் 74 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் நடந்த போட்டிகளின் லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு, சென்னை, திருச்சி அணிகள் முதல் 3 இடும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல், சேலம், மதுரை அணிகள் முதல் 3 இடங்களை பிடித்தன.
இதற்கான பரிசளிப்பு விழா பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். அமைச்சர்கள் பெரியாமி, சக்கரபாணி முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா, தமிழ்நாடு பூப்பந்தாட்ட மாநில துணைத்தலைவர் சீனிவாசன், பி.எஸ்.என்.ஏ ., பொறியியல் கல்லூரி சேர்மன் ரகுராம், முதல்வர் வாசுதேவன், இணைப்பதிவாளர் விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசுப் பெற்ற அணி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.75ஆயிரம், 2ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம், 3 ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் பரிசுத் தொகை, சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விளையாட்டு சீருடைகள், வரவேற்பு கிட் , பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.