ADDED : அக் 08, 2025 06:39 AM

வேடசந்துார்; வேடசந்துாரில் நாளை( அக்.9) --நடக்கும் திருமண விழாவிற்கு துணை முதல்வர் உதயநிதி வருகை தர உள்ளதை தொடர்ந்து அவர் பங்கேற்குள் விழா இடங்களை அமைச்சர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
வேடசந்துார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்ல திருமண விழா நடக்கும் ஸ்ரீராமபுரம் கலைஞர் திடல், அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை அமைச்சர்பெரியசாமி ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தி.மு.க., நிர்வாகிகள் சுப்பையன், பண்ணை கார்த்தி, மருத பிள்ளை, கவிதாமுருகன், மாரிமுத்து, முத்துக்கிருஷ்ணன், சாகுல் ஹமீது, ஒப்பந்ததாரர் பாண்டியன், சுப்பிரமணி, சரவணன், பொன்ராம், காட்டுபாவா சேட், செல்வக்குமார், ஜெகன், வேல்முருகன், பாஸ்கரன் பங்கேற்றனர்.