/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விதிகளை கடைப்பிடிக்காவிடில் நடவடிக்கை: மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 05, 2025 03:04 AM
திண்டுக்கல்: '' விவசாயிகளுக்கு விதை விற்பனை போது விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ''என திண்டுக்கல், கரூர் மாவட்ட மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ஐரீன் பிரியதர்ஷினி கூறினார்.
நடப்பு காரிப் பருவம், ஆடிப்பட்டத்திற்கான காய்கறி நடவு தொடங்க உள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் விதை உற்பத்தி, மொத்த விற்பனை,சில்லரை விற்பனை நிலையங்களில் திண்டுக்கல் , கரூர் மாவட்டங்களுக்கான மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ஐரீன் பிரியதர்ஷினி ஆய்வு மெற்கொண்டார்.
அப்போது அவர் கூறிதாவது: விதைப்பு காலம் தொடங்க உள்ள நிலையில் தரமான விதைகள், நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படுகிறது. விதை பொருட்கள் விற்பனை செய்யும் அனைவரும் அரசால் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்புத் துறையால் வழங்கப்படும் பதிவு சான்று ,முளைப்புத்திறன் சான்று வைத்திருத்தல் வேண்டும். விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது பெயர்,முகவரி,பயிர் ரகம், காலாவதி தேதி குறிப்பிட்டு விற்பனை ரசீது வழங்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத கடைக்காரர்கள் மீது விதைகள் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். விதை ஆய்வாளர்கள் வீரக்குமார், குமரவேல் உடனிருந்தனர்.