ADDED : பிப் 08, 2026 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருவது வழக்கம். குடியரசுதினம், தொடர் விடுமுறையில் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் வார நாட்களில் கூட்டம் குறைவாக இருந்தது. வார விடுமுறையான நேற்று உள் மாவட்ட பயணிகள் வருகை இல்லாத நிலையில் கேரளா மாநில பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.
இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடின. வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 5:00 மணிக்கு பின் பனியால் குளிர் நிலவியது. முக்கிய ரோடுகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

