sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி பெண் கொலையில் தாய், கள்ளக்காதலன் கைது

/

 பழநி பெண் கொலையில் தாய், கள்ளக்காதலன் கைது

 பழநி பெண் கொலையில் தாய், கள்ளக்காதலன் கைது

 பழநி பெண் கொலையில் தாய், கள்ளக்காதலன் கைது


ADDED : பிப் 08, 2026 07:52 AM

Google News

ADDED : பிப் 08, 2026 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி லட்சுமிபுரத்தில் 25 வயது பெண் கொலை செய்யப்பட்டதில் தாய், கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

பழநியை சேர்ந்த முருகானந்தம் மகள் கீதா 25. லட்சுமிபுரத்தில் தனியாக வசித்து வந்தார். சில வாரங்களுக்கு முன் செல்வராஜ் 62, உடன் திருமணம் ஆனது. பிப்.3 இரவு வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். பழநி டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.

இதில் கீதாவின் தாய் ஹெலன்சிபா 47, தாயின் கள்ளக்காதலன் சேலம் மணிகண்டன் 29, சேர்ந்து கொலை செய்ததை கண்டறிந்தனர்.

விசாரணையில், கீதாவின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மணிகண்டன், ஹெலன்சிபா மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் சாட்சி சொல்லக் கூடாது என கீதாவை மிரட்டி வந்தனர்.

இதற்காக கத்தி முனையில் மிரட்டியபோது இதை அவர் ஏற்காததால் இருவரும் சேர்ந்து கீதாவை கத்தியால் குத்தி கொன்றனர்.

பின் அங்கிருந்து ஈரோடு வழியாக வேதாரண்யம் தப்பிச் சென்றனர். இதன் வழக்கில் ஜாமின் பெற நேற்று முன்தினம் பழநி வந்தனர்.

சிவகிரிபட்டி அருகே திருவள்ளுவர் நகர் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us