/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
/
வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
ADDED : ஏப் 14, 2025 05:50 AM

ஒட்டன்சத்திரம்: கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரளா வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கேரளாவில் விடுமுறை அல்லது ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு முதல் நாள் கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய மாட்டார்கள்.
இதனால் அன்றைய தினம் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படும்.
இன்று (ஏப்.14) கேரளா புத்தாண்டை முன்னிட்டு அம்மாநில வியாபாரிகள் நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை கொள்முதல் செய்யவில்லை.
இது குறித்து விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியதால் அவர்களும் குறைந்த அளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.
இதனால் மாலையில் சுறுசுறுப்புடன் இயங்கும் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கேரள வியாபாரிகளை நம்பி உள்ளதால் அவர்கள் கொள்முதல் செய்யவில்லை என்றால் இங்கு வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.