/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேல்நிலை தொட்டி அமைத்தும் குடிநீர் வசதியின்றி பரிதவிப்பு
/
மேல்நிலை தொட்டி அமைத்தும் குடிநீர் வசதியின்றி பரிதவிப்பு
மேல்நிலை தொட்டி அமைத்தும் குடிநீர் வசதியின்றி பரிதவிப்பு
மேல்நிலை தொட்டி அமைத்தும் குடிநீர் வசதியின்றி பரிதவிப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:28 AM
வேடசந்துார்: ஆர்.வெள்ளோடு ஊராட்சி இரகாளிப்பட்டியில் 30 வீடு , சுற்றுப்பகுதி தோட்டங்களில் 30 களத்து வீடு என 60 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக களத்து வீடு பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான போர்வெல், பைப்லைன் எதுவும் அமைக்காத நிலையில் மேல்நிலைத் தொட்டி மட்டுமே வெறுமனே காட்சி பொருளாக உள்ளது. களத்து வீடு மக்களின் நலன் கருதி போர்வெல் அமைத்து குடிநீர் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி,குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இரகாளிப்பட்டி ஊர் பிரமுகர் தேவராஜ் கூறியதாவது: 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி மட்டும் கட்டி முடித்துள்ளனர். அதற்கான போர்வெல் , பைப்லைன் வசதி எதுவும் இல்லை. போர்வெல் அமைத்தோ , காவிரி குடிநீர் இணைப்பு கொடுத்தோ முறையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என்றார்.