/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை பெய்தும் வாய்க்காலில் நீர்வரத்து இல்லை குறைந்துவரும் ஆத்தூர் நீர்த்தேக்க நீர்மட்டம்

ADDED : ஆக 11, 2025 04:03 AM
ஆத்தூர்: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் 2 நாட்களாக சாரல் மழை பெய்தபோதும், வாய்க்காலில் நீர்வரத்து துவங்கவில்லை. தண்ணீர் மட்டம், வெகுவாக குறைந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சித்தரேவு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மணலூர், புல்லாவெளி, தாண்டிக்குடியை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், 2023ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்றது.
கடந்தாண்டு 3 முறை மட்டுமே மறுகால் சென்றது. இந்தாண்டில், இதுவரை போதிய மழை பெய்யவில்லை.
வாய்க்காலில் வரத்து நீர் இல்லாததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
கடந்த 2 நாட்களாக, நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்கிறது.
இருப்பினும் வழித்தட பகுதிகள் வறண்டிருந்ததால் நீர்வரத்து துவங்கவில்லை. அடுத்தடுத்து நீர்மட்டமும் குறைந்து, நேற்றைய நிலவரப்படி 10.5 அடி(மொத்த கொள்ளளவு 24 அடி)யாக இருந்தது.