/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு
/
ஒட்டன்சத்திரத்தில் வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு
ADDED : ஜன 27, 2024 06:40 AM

ஒட்டன்சத்திரம் :  ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் ரூ.26 கோடியில்  வணிக வளாகம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.50 கோடியில்  போட்டி  தேர்வு  அறிவுசார் மையம், எம்.எல். ஏ.,  அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சர்  ஆய்வு செய்தார்.அப்போது   கூறியதாவது:  அறிவுசார் மையம் விரைவில் பயன்பாட்டிற்கு  வர  உள்ளது. இங்கு சிறந்த வல்லுநர்களை  கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் கணேஷ், பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன்,    திட்டக் குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு,  ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஊராட்சித் தலைவர் அமுதா, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம் ,தாசில்தார் முத்துச்சாமி உடன் இருந்தனர்.

