/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை; கண்டுகொள்ளாத நகராட்சி, கோயில் நிர்வாகங்கள்

ADDED : ஜூலை 07, 2025 02:22 AM

பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் பாதையாத்திரை பக்தர்கள் என நாள்தோறும் அதிக அளவில் ரயில், பஸ், தனியார் வாகனங்கள் மூலம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் சார்பில் முறையாக செய்து கொடுப்பதில்லை.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் போதிய கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. திரு ஆவினன்குடி அருகே அருள்ஜோதி வீதி ஆகிய பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் இல்லை. கோயில் சார்பில் உள்ள சுற்றுலா வாகன நிறுத்தும் இடம் ஓரிரண்டே உள்ளது.
கோயில் பகுதிகளில் நுழைவுக்கட்டணம் கட்டுவதோடு, தனியார் வாகன பார்க்கிங்கிற்கும் பணம் செலுத்த வேண்டிய நிலையில் பக்தர்கள் உள்ளனர். மேலும், ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
அதே நேரத்தில் கைடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் போலி கைடுகளால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கோயில் வரை பக்தர்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பழநி கோயில் நகரத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி, கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.