ADDED : டிச 16, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநியில் பக்தர்கள் குவிந்த நிலையில் கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால்,பேட்டரி கார்,பஸ் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு வின்ச் வரிசையில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
பின்னர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் பொது தரிசன,கட்டண வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் தனி வழி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி பகுதிகளில் முறையாக வாகன நிறுத்தும் வசதிகள் இல்லாததால் ரோட்டில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.