/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடர் விடுமுறையால் பழநியில் பக்தர்கள் கூட்டம்
/
தொடர் விடுமுறையால் பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED : நவ 04, 2024 05:52 AM

பழநி; திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்று சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வின்ச் வாயிலாக செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.
மாற்றுத் திறனாளிகள் தனிவழி வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் யானை கஸ்துாரி வெளிப்பிரகாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிரி வீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார், பஸ் வாயிலாக இலவசமாக பக்தர்கள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.