ADDED : செப் 23, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரோப் கார், வின்ச் ஸ்டேஷன்களில் கட்டண வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வெயிலின் தாக்கதால் அவதிப்பட்டனர். படிப்பாதை,யானைப்பாதை வழியாக மேலே ஏறவும், கீழே இறங்க படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். மாலை சாயரட்சை கால பூஜை வேளையில் வெளிப்பிரகாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் விளக்கு பூஜை நடந்தது. உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்திலும், அதன் பின் தங்கரத புறப்பாட்டிலும் முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். பலர் தங்கரதத்தை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.