ADDED : மார் 10, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு கிரிவீதி பகுதிகளில் வாகனங்கள் அனுமதி இல்லாததால் பக்தர்கள் எளிதாக கிரிவலம் வந்தனர். அதேநேரம் அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
வின்ச், ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பக்தர்களின் பாதங்களை காக்க கூலிங் பெயின்ட் அடிக்க ஆய்வு செய்யப்பட்டது.

