/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு
/
அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு
அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு
அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு
ADDED : பிப் 16, 2024 06:05 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை காக்க வைத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர தலைவர் சிவா அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல், அறங்காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஹிந்து அறநிலையத்துறை சூப்பிரண்டு ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகளையும், இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறை அதிகாரிளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.