/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொழுமம் சாலையில் இல்லை தனிப்பாதை; தவிப்பில் பழநி பாதயாத்திரை பக்தர்கள்

ADDED : டிச 19, 2025 06:27 AM
பழநி: பழநிக்கு கொழுமம் பாப்பம்பட்டி நெய்க்காரப்பட்டி வழியாக வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி பாதை அமைத்து தர வேண்டும்.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு வழிகளிலிருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். திண்டுக்கல், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், வழியாக வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் சாலை, புது தாராபுரம் சாலை, பழைய தாராபுரம் சாலையில் தனி பாதயாத்திரை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை, ஊட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு மடத்துக்குளம் வழியாக வரும் பாதையில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் பக்தர்கள் நடந்து செல்ல தனிப்பாதை இல்லை. பாலக்காடு, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் இருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும் கொழுமம், நெய்க்காரப்பட்டி வழியாக பழநி வந்து சேரும் பாதையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வழியே வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி பாதை அமைத்து தர நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.