/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தாண்டில் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
/
புத்தாண்டில் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 02, 2026 06:05 AM

திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டை யொட்டி திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு விளக்கேற்றி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கோட்டை மாரியம்மன், மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், ரயில்வே ஸ்டேஷன் ரயிலடி விநாயகர், பாரதிநகர் புவனேஸ்வரி அம்மன், நாகல் நகர் வரதராஜ பெருமாள், வெள்ளை விநாயகர், செல்வ விநாயகர், 108 நன்மை தரும் விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன், கூட்டுறவு நகர் விநயாகர், எம்.வி.எம்., நகர் பெருமாள் கோயில் , நந்தவனப்பட்டி ரோடு வழிகாட்டி விநாயகர், செல்லாண்டியம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகளுக்கு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கேக்வெட்டிய எஸ்.பி., திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஏராளமான மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் அங்கு வந்தார். அங்கிருந்த மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்ததன்பேரில் குழந்தைகள், சிறுவர்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பொதுமக்கள் போலீசாருடன் புகைப்படம் எடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் வள்ளி, சிவசுப்பிரமணியருக்கு , மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் வெண்பட்டு உடுத்தி திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீாராதனைகள் நடந்தது.
வடமதுரை: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், ரயில்வே ஸ்டேஷன் ரோடு செல்வவிநாயகர், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில், தென்னம்பட்டி சவடம்மன் நந்தீஸ்வரன், காணப்பாடி முத்தம்மன், எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.

