/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து
/
மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து
மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து
மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து
ADDED : ஜன 02, 2026 06:06 AM

ஆணியால் பாழாகும் மரங்கள்
திண்டுக்கல்- நத்தம் ரோடு பொன்னகரத்தில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் . மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளதால் இதை தடுக்க வேண்டும். அமுதா, திண்டுக்கல்.
...................---------பராமரிப்பற்ற பூங்கா
அய்யம்பாளையம் கே.பி. டி. நகர் பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது .இதில் குழந்தைகள் விளையாடுகின்றனர் .விஷ பூச்சிகள் அதிக அளவில் உள்ளதால் இதை அகற்ற வேண்டும்.மகேஸ்வரி, அய்யம்பாளையம்............--------மின்கம்பத்தில் பலகை
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு ரோட்டில் மின்கம்பத்தில் ஆபத்து என தெரிந்தும் விளம்பர பலகைகளை அமைத்துள்ளனர். இதனை அகற்ற துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணகுமார், திண்டுக்கல்.
..........--------குப்பையை குவித்து தீ
ஆத்துார் கலிக்கம்பட்டி ஊராட்சி கலைமகள் காலனி அருகே மயானத்தில் கழிவுகளை குவித்து எரியூட்டுவதால் சுகாதாரக்கேடு தாராளமாகி விட்டது.இதன் காரணமாக பலரும் நோய் தொற்றுக்கும் ஆளாகின்றனர். -வி.ஜோதிமுத்து, கலிக்கம்பட்டி.
........--------தவறான வழிகாட்டுதல்
திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் ரவுண்ட் ரோடு பிரிவு அருகில் உள்ள பேரி கார்டில் செல்லும் திசையை மாற்றி வைத்துள்ளதால் திருச்சி செல்வோருக்கு தவறான வழிகாட்டுதலாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும். --நாகேந்திரன், செங்குறிச்சி...........--------கழிவுநீர் தேக்கத்தால் நோய்
சாணார்பட்டி வேம்பார்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செல்லும் ரோட்டில் சாக்கடை இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பிச்சால், வேம்பார்பட்டி.
..............--------ரேஷன் கடை கூரை சேதம்
கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் ரேஷன் கடையின் கூரை சேதம் அடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் கட்டடத்தை புதுப்பித்து தருவதோடு புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.தண்டபாணி, ரங்கநாதபுரம்........--------

