ADDED : ஜன 02, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: அரசுப் பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன், இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன், பொருளாளர் முத்துப்பாண்டி, செயலாளர் ரஞ்சித்குமார் ,நிர்வாகிகள் செந்தில்முருகன், ராமகிருஷ்ணன், நடவரசி ராஜதுரை பங்கேற்றனர். ஸ்டிக்கர் ஒட்டியவர்களை வத்தலக்குண்டு போலீசார் தடுக்க வாக்குவாதம் ஏற்பட்டது.

