/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 30, 2024 01:03 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று விடுமுறை நாளை முன்னிட்டு தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலையில் வெளிப்பிரகாரத்தில் கோயிலை சுற்றிலும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படிப்பாதையில் அலைபேசி சோதனை செய்யும் இடத்திலும் பக்தர்கள் அதிகமாக குவிந்தனர். ஐயப்ப, மேல்மருவத்துார், தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகரித்திருந்தது. தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர். படிப்பாதையில் பக்தர்கள் குழுவாக நிறுத்தி வைக்கப்பட்டு பின் அனுப்பப்பட்டனர்.
கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். கிரி வீதியில் மேளதாளத்துடன் பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வலம் வந்தனர். கிரிவீதியில் போதிய இலவச பேட்டரி கார், பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.