/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மணக்காட்டூரில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
மணக்காட்டூரில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : ஜன 02, 2026 06:03 AM

நத்தம்: நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 14 ம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து ஐயப்பனுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அய்யனார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல், தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இருமுடி கட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐயப்பன் ரத வீதியுலா கோவில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தது.
முக்கிய நிகழ்ச்சியான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குருசாமிமுதலில் பூக்குழி இறங்க 100க்கு மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மணக்காட்டூர் கோயில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

