/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் தவறி விழுந்து நிதி நிறுவன அதிபர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து நிதி நிறுவன அதிபர் பலி
ADDED : ஜன 02, 2026 06:03 AM

வேடசந்தூர்: வேடசந்துார் அருகே கிணற்றில் தவறி விழுந்து திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் பலி யானார்.
கல்வார்பட்டி ஊராட்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் 45. திண்டுக்கல்லில் குடும்பத்துடன் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஊரில் உள்ள தோட்டத்தில் தனது தாயார் தயாரம்மாள் மட்டுமே உள்ளார். இதனால் வாரம் இரு முறை தாயாரையும், தோட்டத்தையும் பார்த்து செல்வது வழக்கம். நேற்று அதிகாலை தோட்டத்து கிணற்றில் மோட்டாரை இயக்குவதற்காக, தண்ணீர் எவ்வளவு உள்ளது என டார்ச் லைட் அடித்தப்படி எட்டிப் பார்த்துள்ளார். இருள் என்பதால் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். தீயணைப்புதுறையினர் உடலை மீட்டனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

