நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கல் துவக்க விழா நடந்தது. தாசில்தார் முத்துமுருகன் தலைமை வகித்தார்.
வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணி, சித்நனதையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு, துணை தலைவர் ஜாகிர்உசேன், செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க சார்பதிவாளர் அறிவழகன், வேட்டி சேலை வழங்கலை துவக்கி வைத்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி செல்ல மரைக்காயர் பங்கேற்றனர்.