/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான தரைப்பாலத்தால் சடலம் செல்ல சிரமம்
/
சேதமான தரைப்பாலத்தால் சடலம் செல்ல சிரமம்
ADDED : ஜன 20, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதால் டிச.13ல் குதிரை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்ல பயன்படுத்தப்பட்ட தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் சரி செய்யப்படாத நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த கச்சம்மாள் 70, இயற்கை மரணம் அடைந்தார். அவரது சடலத்தை அவரது உறவினர்கள் ஆற்றின் வழியே துாக்கி வரும் போது சிரமம் ஏற்பட்டது. ஆபத்தான முறையில் சடலத்தை எடுத்து வரும் நிலை இருப்பதால் தரைப்பாலத்தை விரைவில் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.