/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிரமத்திற்கு மேல் சிரமம் : முறையான பராமரிப்பின்றி இயங்கும் அரசு பஸ்கள்
/
சிரமத்திற்கு மேல் சிரமம் : முறையான பராமரிப்பின்றி இயங்கும் அரசு பஸ்கள்
சிரமத்திற்கு மேல் சிரமம் : முறையான பராமரிப்பின்றி இயங்கும் அரசு பஸ்கள்
சிரமத்திற்கு மேல் சிரமம் : முறையான பராமரிப்பின்றி இயங்கும் அரசு பஸ்கள்
ADDED : பிப் 16, 2024 06:01 AM

மாவட்டத்தில் உள்ள அரசு பஸ் டெப்போக்கள் மூலம் விரைவுப் பஸ்கள், டவுன் பஸ்கள் 300க்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பஸ்கள் நகர்ந்தால் போதும் என்ற கதியில் இயக்கப்படுகின்றன. பஸ்களின் இன்ஜின்கள், உட்காரும் இருக்கைகள், ஜன்னல்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. பயணிகளின் நலனில் சிறிதும் அக்கறையின்றி ஏனோ தானோ என்று இயங்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பல பஸ்களில் பழுதடைந்த சீட்டுகள், கண்ணாடிகள் இல்லாத ஜன்னல்கள், கண்ணாடிகள் இருந்தும் அவற்றை நகர்த்த முடியாத நிலை, பெயர்ந்து விழும் நிலையில் கூரை என குறைபாடுகள் அதிகம் உள்ளன.
குறிப்பாக அரசு பஸ்கள் சுத்தம் இன்றி காணப்படுகிறது. பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு தின்பண்ட குப்பையை பஸ் உள்ளேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அரசு பஸ்கள் அசுத்தம் நிறைந்ததாக தோற்றமளிக்கிறது. புதிதாக வரும் பஸ்களும் தொடர் பராமரிப்பு இன்மையால் சிறிது நாட்களிலே பழைய பஸ் போல் ஆகிவிடுகிறது. பஸ்களின் உட்புறத்தை தினந்தோறும் கூட்டி சுத்தம் செய்வது கிடையாது. முதல் நாள் எந்த நிலையில் பஸ் நிறுத்தப்படுகிறதோ அதே நிலையில் மறுநாளும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இத்துடன் காலாவதியான பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதால் பழுதாகி நடுரோட்டில் நின்று தள்ளு மாடல் வண்டியாக மாறி வருகின்றன.