UPDATED : செப் 02, 2026 11:28 PM
ADDED : செப் 01, 2026 07:43 PM

அ நிறம் | அளவு
பழநி;பழநி ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் நேற்று திறக்கப்பட்டது.
பழநி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்பு பணிகள் முடிவுற்று திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இங்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளது போல் 'டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் கமர்சியல் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நிலைய மேலாளர் சுனில் ராம் லாக்கர் ஆகியோர் தலைமை வகித்து திறந்து வைத்தனர். இதன் செயல்பாடுகள் குறித்து பயணிகளுக்கு விளக்கம் அளித்ததுடன், லாக்கர் 24 மணி நேரமும் சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
