/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சி வார்டுகளில் கூடுதல் அலுவலர் நியமனம்
/
ஊராட்சி வார்டுகளில் கூடுதல் அலுவலர் நியமனம்
ADDED : செப் 23, 2011 10:47 PM
பழநி : கிராம ஊராட்சி ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் அலுவலர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில், கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டு முறை இருந்தது. தற்போது, ஒரு உறுப்பினர் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை; ஓட்டுச்சாவடிகளும் மறுவரையறை செய்யப்படவில்லை. இதனால், சில ஓட்டுச்சாவடிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இவற்றில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பழைய இரண்டு உறுப்பினர் வார்டுக்கான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. குழப்பத்தை போக்க, ஒரே சின்னம் அடுத்தடுத்த வார்டுகளில் பயன்படுத்தப்படாது. சாதாரண ஓட்டுச்சாவடிகளில் ஆறு அலுவலர்கள் இருப்பர். பழைய இரண்டு உறுப்பினர் ஓட்டுச்சாவடிகளில், ஏழு பேர் நியமிக்கப்படுவர். அனைத்து ஓட்டுச்சீட்டுகளும் ஒரே பெட்டியில் சேகரிக்கப்படும். சின்னங்கள் வித்தியாசத்தின்படி, வார்டு வாரியாக பிரிக்கப்படும்,'' என்றார்.