/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கும் பழநி பூக்கள்
/
திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கும் பழநி பூக்கள்
ADDED : செப் 23, 2011 10:50 PM
பழநி : திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு, பழநியில் இருந்து பூக்கள்
அனுப்பப்படுகின்றன. பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம், ஆண்டுதோறும் திருப்பதி
கோயிலுக்கு, பூக்கள் அனுப்பப்படுகின்றன. புரட்டாசி சனி வாரம்; நவராத்திரி
பிரமோற்சவ விழா முழுவதும் பூக்கள் செல்லும். பக்தர்கள் வழங்கும் பூக்களைச்
சேகரித்து, பஸ் மூலம் அனுப்புகின்றனர். பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று
துவங்கியது. சபா செயலாளர் மருதசாமி கூறியது:
திருப்பதி பிருந்தாவனத்தில் இருந்து, விழாக்களுக்கான பூக்கள்
சேகரிக்கப்படுகின்றன. கூடுதல் தேவைக்காக, திருமலை தேவஸ்தானத்தில் இருந்து,
எங்களிடம் கேட்கின்றனர். சம்மங்கி, மருகு, மரிக்கொழுந்து, செவ்வந்தி,
தாமரை, பிச்சி உள்ளிட்ட பூக்களை, குறைந்தபட்சம் 500 கிலோ வரை
அனுப்புகிறோம். பூக்கள் கொடுக்க முடியாதவர்கள், எங்களிடம் பணம் வழங்கலாம்.
விருப்பம் உள்ளோர் '94434 03026' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,
என்றார்.