/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணன், தங்கை காதல் தற்கொலையில் முடிந்தது
/
அண்ணன், தங்கை காதல் தற்கொலையில் முடிந்தது
ADDED : செப் 23, 2011 10:50 PM
திண்டுக்கல் : தங்கை முறையுள்ள பெண்ணை காதலித்த அண்ணன், பெற்றோருக்கு
பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி
சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 27. இதே ஊரை சேர்ந்த ரேவதியை, 22,
காதலித்தார். செப்., 19 ல், திண்டுக்கல் ஏ.வெள்ளோட்டில் உள்ள உறவினர்கள்
வீட்டிற்கு இருவரும் வந்தனர். நேற்று முன்தினம், அம்பாத்துரை போலீஸ்
ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் சகோதர உறவு என, தெரிந்தது. இருவரின்
பெற்றோரை, போலீசார் அழைத்தனர். இதனால், பயந்த வெங்கடேஷ், ஸ்டேஷனில்
இருந்து வெளியேறி, திண்டுக்கல் குமரன் பூங்காவில் விஷம் குடித்து
மயங்கினார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று இறந்தார்.
ரேவதியை, பெற்றோர் அழைத்து சென்றனர்.