/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல், நத்தத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி
/
திண்டுக்கல், நத்தத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி
ADDED : மார் 13, 2024 06:25 AM

திண்டுக்கல் : போதைப்பொருள் தொடர்பாக தி.மு.க., அரசை கண்டித்து திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டம் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.
அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் மனித சங்கிலி திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி, போஸ்ட் ஆபீஸ், நாகல் நகர், பேகம்பூர் என 4 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் போதைப் பொருட்கள் தலைவிரித்தாடுகிறது .இதனைக் கண்டு கொள்ளாத அரசாக உள்ளதால் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பீட்டில் போதைப் பொருட்களை கடத்தி உள்ளார். இந்த கடத்தல் குறித்து தமிழக அரசுக்கு எதுவும் தெரியாமல் நடந்து இருக்காது.
போலீஸாரை சரியாக செயல்பட விட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
மேலும் உதயநிதி மனைவி கிருத்திகா எடுக்கும் படத்திற்கு இவர் தான் நிதி உதவியும் செய்துள்ளார்.
அதனால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர் கடத்தலுக்கு துணை போனவர்கள், வழிவகை செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
கடலுாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 25 பேர் உயிர் இழந்து உள்ளனர். இது போன்று தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
அதனை சட்டை செய்யாமல் உள்ளது இந்த விடியா அரசு. தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழியும் வரை அ.தி.மு.க., சார்பில் போராட்டம் தொடரும் என்றார். மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட பேரவை செயலாளர் பாரதிமுருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் சத்தியவாணி, மோகன், மாவட்ட பேரவை இணை செயலாளர் சின்னு, பாசறை செயலாளர் செந்தில்குமார், மாணவர் அணி செயலாளர் ராஜேஷ்கண்ணா, வர்த்தகர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கலைபிரிவு செயலாளர் ரவிக்குமார், மாநகராட்சி முன்னாள் துணை த்தலைவர் ஆறுமுகம் ,பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிபங்கேற்றனர்.
நத்தம் விஸ்வநாதன்
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.நகர அவைத் தலைவர் சேக்ஒலி வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ் வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளின் அருகில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும். தி.மு.க., பிரமுகர் ஜாபர் சாதிக் ரூ. 2 ஆயிரம் கோடி அளவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அதிக அளவில் அரசியல் செல்வாக்கு உள்ளது. வருங்கால இளைஞர்கள் போதை பொருட்களால் சீரழிக்கபடுகின்றனர். 3 ஆண்டுகளில் போதை தடுப்பு சம்பந்தமாக சட்டசபையில் பல முறை பேசி உள்ளோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
மாவட்ட பேரவை இணை செயலாளர்கள் ஜெயபாலன், சுப்பிரமணி, தொழிலதிபர் அமர்நாத், மாவட்ட மாணவரணி இணை செயலாளர்கள் அசாருதீன், மணிகண்டன், நகர்பொருளாளர் சீனிவாசன், ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், பண்ணுவார்பட்டி ஆண்டிச்சாமி, புன்னப்பட்டி ஜெயப்பிரகாஷ், செந்துறை நகர நிர்வாகி ராஜேந்திரன்,மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டனர்.
அகரம் பேரூர் கலை செயலாளர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி செயலாளர் முத்தையா, திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் அழகு மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் மகாராஜன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் : முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எஸ். நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி. நடராஜ் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உதயம்ராமசாமி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தேவி குணசேகரன், ஜெ., பேரவை இணைச் செயலாளர் மனோகரன், தகவல் தொழில்நுட்ப பொருளாளர் ராஜசுந்தர செல்வன், நகர ஜெ., பேரவை செயலாளர் குப்புசாமி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காமாட்சிராஜா கலந்து கொண்டனர்.
வடமதுரை: அய்யலூரில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன், நகர செயலாளர் ராகுல்பாபா, நிர்வாகிகள் செல்லப்பாண்டியன், பழனியப்பன், முரளி, ஆறுமுகம், கதிர்வேல், பாஸ்கரன், செந்தில்குமார் பங்கேற்றனர். வடமதுரையில் மாணவரணி செயலாளர் ராஜேஸ்கண்ணா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம், நகர செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.
கொடைக்கானல் : நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, நகராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தன். துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், எம். ஜி. ஆர்., மன்ற இணை செயலாளர் பிச்சை, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துறை செயலர் பாலசுப்பிரமணி, அவைத்தலைவர் ஜான் தாமஸ், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பண்ணைக்காடு பேரூராட்சியில் பேரூராட்சி செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேடசந்துார்: அ.தி.மு.க., நகர செயலாளர் பாபுசேட் தலைமையில் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் பேசினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், பேரவை ஒன்றிய செயலாளர் தண்டபாணி , நிர்வாகிகள் கார்த்தி, வேளாங்கண்ணி, ராமலிங்கம், வைரமுத்து, சந்திரசேகர், நெடுஞ்செழியன், தங்கராஜ், ஆறுமுகம், தண்டபாணி பங்கேற்றனர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முருகன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி:ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சின்னாளபட்டியில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் விஜய பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரஷர் எம்.பாலு, ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி இணைச் செயலாளர் ஆனிசோபிமிடில்டா, வக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அருள் வெண்ணிலா, ஆலமரத்துப்பட்டி ராஜலட்சுமி சந்தானகிருஷ்ணன் பங்கேற்றனர்.
பழநி: பழநி மயில் ரவுண்டான அருகே நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தின் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் பேரூராட்சிகளிலும் நடைபெற்றது.

