/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில் பயணிகள் ஆர்டர் செய்து ருசிக்கும் திண்டுக்கல் பிரியாணி
/
ரயில் பயணிகள் ஆர்டர் செய்து ருசிக்கும் திண்டுக்கல் பிரியாணி
ரயில் பயணிகள் ஆர்டர் செய்து ருசிக்கும் திண்டுக்கல் பிரியாணி
ரயில் பயணிகள் ஆர்டர் செய்து ருசிக்கும் திண்டுக்கல் பிரியாணி
ADDED : ஜன 20, 2025 12:20 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் வழித்தடத்தில் ரயிலில் பயணிப்பவர்கள் பிரியாணிக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து ரயில்வே ஸ்டேஷனுக்கே வரவழைத்து ருசித்து மகிழ்கின்றனர்.
திண்டுக்கல் என்றாலே பூட்டு மட்டுமின்றி பிரியாணியும் நினைவுக்கு வந்து விடுகிறது. திண்டுக்கல் பிரியாணியை ருசிக்க வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் வருகின்றனர். இதை பயன்படுத்தி திண்டுக்கல் பிரியாணி நிறுவனங்கள் வெளியிடங்களிலும் கடைகளை திறந்தாலும் இங்கு வந்து ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகளவில் உள்ளது.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 70க்கு மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இதில் பயணிப்பவர்கள் மதியம், இரவு உணவுக்கு திண்டுக்கல் பிரியாணிக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து ரயில்வே ஸ்டேஷனுக்கே வரவழைத்து ருசிக்கின்றனர்.
பிரியாணியை டெலிவரி பாய்ஸ் சரியாக வாடிக்கையாளர்களின் ரயில்கள் வரும் நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தும் டெலிவரி செய்கின்றனர்.
திண்டுக்கல் பிரியாணி கடைக்காரர் முஜிப் கூறியதாவது: திண்டுக்கல் வரும் மக்களுக்கு பிரியாணி மீது எப்போதும் ஆசை இருக்கும். தற்போது நவீன காலமாக இருப்பதால் ஆன்லைனில் ஆர்டர் செய்து ரயிலில் பயணிப்பவர்களும் இங்கு தயாராகும் பிரியாணியை சாப்பிடுகின்றனர். ஓட்டல் உரிமையாளர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்காக பல செயலிகளை தொடங்கி அதன்மூலமும் பிரியாணி டெலிவரி செய்கின்றனர் என்றார்.