/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் அனுமதி பெறாத அருவிகளுக்கு செல்லத் தடை திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு

ADDED : அக் 26, 2025 02:17 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தடை விதித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி பேத்துப்பாறை பகுதி அஞ்சு வீடு அருவியில் பத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அக்.18ல் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர் பலியானார். இதன்பின் பழநி கொடைக்கானல் நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த அஞ்சு வீடு அருவி சம்பந்தமான அறிவிப்பு பலகையை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
இதை தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள அஞ்சு வீடு அருவி , அரசால் அறிவிக்கப்படாத பிற வன அருவிகளில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் தற்காலிகமாக சுற்றுலா துறை, மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும் வனத்துறை , வருவாய் துறை வசம் உள்ள அருவிகளுக்கு சென்று பார்வையிட, குளிப்பதற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த அருவிகளுக்கு அழைத்து செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீதும் போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.