/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில அளவிலான கலைப்போட்டி திண்டுக்கல் கல்லுாரி சாம்பியன்
/
மாநில அளவிலான கலைப்போட்டி திண்டுக்கல் கல்லுாரி சாம்பியன்
மாநில அளவிலான கலைப்போட்டி திண்டுக்கல் கல்லுாரி சாம்பியன்
மாநில அளவிலான கலைப்போட்டி திண்டுக்கல் கல்லுாரி சாம்பியன்
ADDED : மார் 01, 2026 05:36 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் திருஇருதய கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மாநில அளவில் கலைப்போட்டிகள் நடந்தன. கல்லூரி செயலர் ஜேசுதாஸ் முன்னிலை வகித்தார்.
முதல்வர் ஹேமலதா தலைமை வகித்தார். வேதியியல் துறைத்தலைவர் கிறிஸ்டி ராணி வரவேற்றார். ரங்கோலி, குழு நடனம், குறும்படம், மெஹந்தி, இசைக்கருவி வாசித்தல் 18 பிரிவுகளில் போட்டி நடந்தது. 16 கலைக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டு 17 போட்டியில் வெற்றி பெற்றனர்.
12 போட்டிகளில் முதலிடம், 3 போட்டிகளில் 2ம் இடம், இரண்டு போட்டிகளில் 3ம் இடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். கல்லூரி முதல்வர் சிறுமலர், செயலர் நேச சவுந்தரம், நிர்வாகி கன்னியாஸ்திரி பர்த்தலோமியோ உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவிகள், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வெண்ணிலாவை பாராட்டினர்.
இதுபோல் திண்டுக்கல் புனித அந்தோனியார் கலை, அறிவியல் கல்லூரி, நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி, மதுரை மங்கையர்கரசி கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த போட்டிகளிலும் திண்டுக்கல் பான் செக்கர்ஸ் கல்லுாரி மாணவிகள் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

