/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் ரோடுகள் அமைக்க அறிவுரை
/
பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் ரோடுகள் அமைக்க அறிவுரை
ADDED : ஆக 01, 2011 11:11 PM
திண்டுக்கல் : பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கழிவுகளை கொண்டு ரோடுகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் நாகராஜன் முன்னிலையில் நடந்தது.
மாநில திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தாஷீலாநாயர் பேசியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் துறைகள் வாரியாக மேற்கொள்ளப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை துறை அலுவலர்கள் தயாரிக்கவேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது அதன் தொடர்புடைய பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டங்களை பெண்கள் பங்கு பெறும் வகையில் மேற்கொள்ளவேண்டும். சூரியசக்தி, காற்று, பயோகாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து சுயதேவையைப்பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இவற்றை பள்ளி விடுதி, தொழிற்சாலைகளில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பிளாஸ்டிக் பைகள் கழிவுகளை ரோடுகள் அமைக்க பயன்படுத்த வேண்டும், என்றார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் பிரேமா, மாவட்ட திட்டக்குழு செயலாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.