ADDED : ஆக 01, 2011 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : வேடசந்தூரில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இங்கு கல்லூரி அமைக்கப்படும் என, தேர்தலின் போது அனைத்து வேட்பாளர்களும் வாக்குறுதி கொடுப்பர். ஆனால், யாரும் முயற்சி எடுக்கவில்லை. இதனால் வேடசந்தூர் தொகுதி மக்களின் கனவாகவே அரசு கல்லூரி உள்ளது. இத்தொகுதியில் 10 க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. உயர் கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். இந்த ஆட்சியிலாவது அரசு கல்லூரி துவக்க வேண்டும். பழனிச்சாமி எம். எல்.ஏ., கூறுகையில், ''இதுகுறித்து முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன். தொடர்ந்து வலியுறுத்தி, வேடசந்தூர் மக்களின் உள்ளக்குமுறலை தீர்த்து வைப்பேன். தொகுதியில் மையமாக கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.