/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்குவாரி கழிவுகள் கலெக்டரிடம் புகார்
/
கல்குவாரி கழிவுகள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஆக 14, 2011 10:21 PM
குஜிலியம்பாறை : சின்னலுப்பை ஊராட்சியில் கல்குவாரி கழிவுகளை ரோட்டருகே கொட்டுவதால், விபத்து அபாயம் இருப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
முத்தம்பாறை அருகே தனியார் கல் குவாரி உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, உல்லியக்கோட்டை- முத்தம்பட்டி செல்லும் ரோட்டருகே கொட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ரோட்டின் இரு புறமும் பாறைகளை ஆழமாக உடைப்பதால், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள அரசு குவாரி போக்குவரத்து, விபத்து அபாயத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தாதனூர் தொடக்க பள்ளி அருகே உள்ள தனியார் குவாரியில் மட்டும், வெடி வைத்து கல் உடைக்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் உள்ளது என, கலெக்டரிம் புகார் அளித்துள்ளனர்.