/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை
/
ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை
ADDED : ஆக 25, 2011 11:18 PM
சாணார்பட்டி : சாணார்பட்டி ஒன்றியம் தலையாரிபட்டியில், மயான பாதை ஆக்கிரமிப்பை உடனே அகற்றி பாதை அமைக்க, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார்.
தலையாரிபட்டியில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. ஓடை வழியாக சென்று வருகின்றனர். மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் வரும் போது இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் சிக்கல் நீடித்தது. இது குறித்து சாணார்பட்டி ஒன்றியத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மக்கள் முறையிட்டனர். மயான பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தலையாரிபட்டியில் இருந்து மயானம் வரை, ஒரு மாதத்திற்குள் ரோடு அமைக்க வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.