ADDED : ஆக 25, 2011 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் வனப்பகுதியில் சுற்றுலா தலங்களில் சிறுவியாபாரிகள், வனக்குழு உதவியுடன் குப்பையை அகற்றி வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளிடம் பேசி குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் போடவும், வனப்பகுதியில் சிகரெட் பிடிக்க வேண்டாம் எனவும் எடுத்து கூறி வருகின்றனர். சிறுவியாபாரிகளிடம் வனத்தை காப்பது குறித்து வன அதிகாரிகள், வனக்காப்பாளர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். வனக்குழு சார்பில் வியாபாரிகளிடம் சிறிதளவு பணம் வசூலிக்கப்பட்டு 12 நபர்களை நியமித்து, வனப்பகுதியை சுத்தமாக வைத்துள்ளனர். இப்பணி மூலம் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.