ADDED : செப் 11, 2011 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் மேக மூட்டம் நிலவி காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. சில தினங்களாக காலை 11 மணிக்கு தொடங்கும் மழை பகல் 2 மணி வரை நீடிக்கிறது. இந்நிலையால் விவசாய பணிகள் பாதித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க் கை முடங்கியுள்ளது.
பருவ மழை துவங்கியது முதல் இதுவரை 412 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.