sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வி.ஏ.ஒ., க்களை தேடி நெடிய பயணம் : விரக்தியில் கிராமத்தினர்

/

வி.ஏ.ஒ., க்களை தேடி நெடிய பயணம் : விரக்தியில் கிராமத்தினர்

வி.ஏ.ஒ., க்களை தேடி நெடிய பயணம் : விரக்தியில் கிராமத்தினர்

வி.ஏ.ஒ., க்களை தேடி நெடிய பயணம் : விரக்தியில் கிராமத்தினர்


ADDED : செப் 15, 2011 09:13 PM

Google News

ADDED : செப் 15, 2011 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : வேடசந்தூர் தாலுகாவில், 23 வி.ஏ.ஒ., பணியிடங்கள் காலியாக உள்ளதால், அப்பகுதியினர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இத்தாலுகாவில் ஏழு பிர்க்கா, 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூம்பூர், வடுகம்பாடி, ஆர்.கோம் பை, வாணிக்கரை, ஆலம்பாடி உள்ளிட்ட 23 வி.ஏ.ஒ., பணியிடங்கள் நீண்ட காலமாக, காலியாகவே உள்ளன. 60 கி.மீ., சுற்றளவு கொண்ட, இங்கு, பொது மக்கள், மாணவர்கள், வருவாய்த்துறை சான்றுகளுக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். முதியோர் உதவித்தொகை, பட்டா மனுக்களை, அந்தந்த பகுதி வி.ஏ.ஒ., க்களிடமே கொடுக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொறுப்பு வி.ஏ.ஒ., எப்போது வந்து, போவார் என, தெரியாமல், மக்கள் பரிதவிக்கின்றனர். சில வி.ஏ.ஒ., க்கள் இரண்டு, மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பணியாக பார்ப்பதால், யார் வி.ஏ. ஒ., என, கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந்து வருவாய் அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். ஜாதி, வருமான சான்றுகள் பெற, இவர்களை தேடி மக்கள் அலைகின்றனர். வறட்சி பகுதியான இங்கு, அரசின் நல திட்டங்கள், பொது மக்களுக்கு முறையாக சேரவேண்டும் என்றால், போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us