/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தல் வந்தாச்சு: "கும்பிடு' க்கு குறைவில்லை
/
தேர்தல் வந்தாச்சு: "கும்பிடு' க்கு குறைவில்லை
ADDED : செப் 23, 2011 12:56 AM
குஜிலியம்பாறை : உள்ளாட்சி தேர்தல் ஜூரத்தால், 'கும்பிடும்' கலாசாரம் களை கட்டியுள்ளது.
அரசியல், அரசியல்வாதிகள் என்றாலே சிலருக்கு அலர்ஜி. அராஜகம், ஊழல் போன்றவை இதற்கு காரணம். அரசியலில் உள்ள ஒரே பண்பாடு, சாமான்ய மனிதர்களையும், கை எடுத்து கும்பிடுவது தான். தேர்தல் வந்து விட்டால், சாதாரண குப்பனையும், சுப்பனையும் வீடு தேடிவந்து கும்பிடுவது தான். இரு கரம் கூப்பி வரவேற்பதும், உபசரிப்பதும் தமிழர் பாண்பாடு என்றாலும், 'கும்பிடுவது' மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்கிறது; பண்பாடு மட்டும் காணாமல் போய்விடுகிறது. பால்ய நண்பர்களை எதிரே சந்தித்தாலும் கூட, கால வேகத்தால், ஒரு கையில் வணக்கம் போட்டு, நிற்காமல் செல்லும் நிலை தான் நீடிக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலில், ஏராளமானோர் போட்டியிட உள்ளனர். இவர்கள் இப்போதே பணிகளை துவங்கி விட்டதால், திரும்பிய பக்கமெல்லாம், கும்பிடு போட்டு அசத்துகின்றனர். எது எப்படியோ, தேர்தலால் கும்பிடும் 'நல்ல பழக்கம்' ஆங்காங்கே துளிர்விடுகிறது என்பது மட்டும் ஆறுதலான விஷயம்.