sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொக்கி போட்டு மின் திருட்டு ஊராட்சிகளில் புது "டெக்னிக்'

/

கொக்கி போட்டு மின் திருட்டு ஊராட்சிகளில் புது "டெக்னிக்'

கொக்கி போட்டு மின் திருட்டு ஊராட்சிகளில் புது "டெக்னிக்'

கொக்கி போட்டு மின் திருட்டு ஊராட்சிகளில் புது "டெக்னிக்'


ADDED : செப் 24, 2011 09:47 PM

Google News

ADDED : செப் 24, 2011 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : நிதி நெருக்கடி, மின் சுமை காரணமாக ஊராட்சிகள் திணறி வருகின்றன.

குடிநீர் மோட்டார்களுக்கு, கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் 'டெக்னிக்' பின்பற்றப்படுகிறது. தமிழக உள்ளாட்சி நிர்வாகங்கள், கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. குடிநீர், தெருவிளக்கு பராமரிப்புக்காக வழங்கப்படும் மாநில மானிய நிதியும் வரவில்லை. பல ஊராட்சிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியவில்லை. இந்நிலையில் மின் கட்டணமும், மாதாமாதம் எகிறுவதால், பெரும்பாலான ஊராட்சிகள் லட்சக்கணக்கில் கட்டண நிலுவை வைத்துள்ளன. நிலுவை உள்ளது என்பதற்காக, தெருவிளக்குகளை பராமரிக்காமலோ, குடிநீர் வழங்காமலோ இருக்க முடியாது. இக்கட்டான நிலையில், கம்பத்தில் கொக்கி போட்டு பகிரங்க மின் திருட்டு நடக்கிறது. 'பொது மக்களின் குடிநீருக்காக தான்,' என, நிர்வாகிகள் விளக்கம் அளிக்கின்றனர். பொது மக்களும் மின் வாரியத்திடம் போட்டுக் கொடுப்பதில்லை. ஆபத்தான நிலையில், கைக்கு எட்டும் தூரத்தில், உயர் அழுத்த மின் சப்ளை, சுவிட்ச் போர்டுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. மின்வாரிய அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இப்படி இருந்தால், மின்வாரியம் எப்படி லாபத்தில் இயங்கும்?










      Dinamalar
      Follow us