/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாராலிம்பிக்கிற்கு திண்டுக்கல் மாணவி தேர்வு
/
பாராலிம்பிக்கிற்கு திண்டுக்கல் மாணவி தேர்வு
ADDED : பிப் 13, 2024 07:22 AM

சின்னாளபட்டி : பிரான்சில் நடக்க உள்ள பாராலிம்பிக் டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க சின்னாளபட்டி மாணவி லின்சியா 19,தேர்வாகி உள்ளதாக சின்னாளபட்டி ராஜன் விளையாட்டு அரங்க டேக்வாண்டோ பயிற்சியாளர் பிரேம்நாத் கூறினார்.
மேலுமள் அவர் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிப். 9, 10ல் பாரா டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு அசோசியேஷன் சார்பில் சின்னாளபட்டி சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி லின்சியா 19, சீனியர் பிரிவில் முதலிடம் வென்றார்.
இதை தொடர்ந்து இவர் பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
திண்டுக்கல் பான் செக்கர்ஸ் கல்லுாரியில் பி.ஏ., முதலாண்டு படித்து வரும் இவர் சின்னாளபட்டியில் பயிற்சி பெற்றார் என்றார்.