/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்நடை பராமரிப்பு மருத்துவ துறையில் முன்னிலையில் திண்டுக்கல்
/
கால்நடை பராமரிப்பு மருத்துவ துறையில் முன்னிலையில் திண்டுக்கல்
கால்நடை பராமரிப்பு மருத்துவ துறையில் முன்னிலையில் திண்டுக்கல்
கால்நடை பராமரிப்பு மருத்துவ துறையில் முன்னிலையில் திண்டுக்கல்
ADDED : ஜன 27, 2024 06:38 AM

திண்டுக்கல் : கால்நடைகளின் நோய்களை முற்றிலும் தவிர்க்க அனைத்து மருத்துவ உபகரண வசதிகளையும் கொண்டு மூன்று கோட்டங்களில் மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்களுடன் சிறப்பாக செயல்படுவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது'' என கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் ராம்நாத் தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் வளர்ப்பு ஆலோசனை மையம் செயல்பாடு...
மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் மண்டல இணை இயக்குனரே மாவட்ட அலுவலராகவும் செயல்படுகிறார். கால்நடை பெருக்க துணை இயக்குநர், தீவன அபிருத்தி திட்ட துணை இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் கால்நடைகள் வளர்ப்பு இறித்து நேரடியாக ஆலோசனை பெறலாம்.
கால்நடை மருத்துவமனைகள் எண்ணிக்கை...
திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் என 3 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு கள்ளிமந்தையம், கொடைக்கானல்,ஒட்டன்சத்திரம், பள்ளபட்டி, நிலக்கோட்டையில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகிறது. மாவட்டத்தின் மையத்தில் உள்ள மருத்துவமனையில் கால்நடைகள் சார்ந்த நோய்களுக்கான பன்முக மருத்துவ வசதிகள் நிறைய உள்ளது. மாவட்டத்தில் 106 கால்நடை மருந்தகங்களும், 62 கால்நடை கிளை நிலையங்களும் செயல்படுகிறது. கால்நடைகளின் நோய்களை முற்றிலும் தவிர்க்க அனைத்து மருத்துவ உபகரண வசதிகளையும் கொண்டு சிறப்பாக செயல்படுவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது..
கால்நடைகளுக்கான முகாம்கள் நடத்தப்படுகிறதா...
கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மண்டலத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சியில் 280 சிறப்பு கால்நடை சுகாதார, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு முகாமிற்குமான செலவாக ரூ.10ஆயிரம் வீதம் 28லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கால்நடை தொடர்பாக விவசாயிகள் தங்களது தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
முகாம்களின் செயல்பாடுகள்...
கால்நடைகளை உடற் பரிசோதனைக்கு உட்படுத்தல் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், நோய் தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, இதரஉடற்கூறு அறுவை சிகிச்சைகள் சார்ந்து சிகிச்சை
அளிக்க படுகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 267 முகாம்கள் நடத்த பட்டுள்ளது. மேலும் 13 முகாம்கள் இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்படும்.
கால்நடைகளின் நோய் சிகிச்சை ...
தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி இலவசமாக செலுத்த படுகிறது. மாவட்டத்தில் தற்போது 4வது சுற்றாக கால்நடைகளின் வாய், கால் பகுதி நோய்களுக்கானதடுப்பூசி பணி நடைபெறுகிறது. இதுவரை 2,91,900 கால்நடைகள் இலவச தடுப்பூசி திட்டத்தில் பயன்பெற்றதால் இதன் நோக்கம் 100சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.
வளர்ப்பு ஆடு, கோழி, நாய்களுக்கான சிகிச்சை
மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் வாரம் தாறும் சனி கிழமைகளில் வளர்ப்பு கோழிகளுக்கானவெள்ளை கழிச்சல் நோய்க்கான ஆர்.டி.வி.கே. தடுப்பூசி செலுத்த படுகிறது இதேபோல் அனைத்து கால்நடைமருந்தகங்களிலும், வளர்ப்பு நாய்களுக்கான் வெறிநாய்கடி தடுப்பூசி பணி நாட்களில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வளர்ப்பு ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 3,85,600 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது.
கால்நடைக்கான தொழில் மானியம் வழங்கப்படுகிறதா..
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்சக்தியில் இயக்கப்படும் புல் நறுக்கும் கருவி 50 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. இதுவரை இந்ததிட்டத்தில் 130 பயனாளிகளுக்காக ரூ.20,80,000 செலவிட பட்டுள்ளது.
மானியம் பெற தகுதிகள் ...
பயனாளிகள் இரண்டு கால்நடைகள் வைத்து பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரை ஏக்கர் நீர்பாசனவசதியுள்ள நிலத்தில் தீவனம் பயிரிட்டு மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். அத்தகைய விவசாயிகளுக்காகரூ.32ஆயிரம் மதிப்புள்ள தீவன புல் நறுக்கும் கருவி 50 சதவீத மானியத்தில் ரூ.16 ஆயிரத்திற்கு வழங்க படுகிறது.
இத்திட்டத்தில் ஆண்டுதோறும் 130 பயனாளிகள் தேர்வு செய்து கலெக்டர் ஒப்புதலுடன் இயக்குநர் அலுவலக நிதி ஒதுக்கீட்டில் கருவி வழங்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்புக்கான பயிற்சி உள்ளதா...
மாவட்ட மண்டலங்களில் உள்ள கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைதானத்தில் கன்று, ஆடு, கோழி வளர்ப்புபற்றிய பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. முறைப்படி பயின்று சான்றிதழ்கள் பெற்றால் அரசு திட்டங்களில் மானியங்கள் பெற்று சுயதொழில் மூலமாக இளைஞர்கள் வாழ்வில் முன்னேறலாம்.
கிராமபுறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டு கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் 4 மாத நாட்டு கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்டுகிறது.
தீவன பயிர் உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறதா...
கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை அதிகரிக்க பழ தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதைஊக்குவிக்கும் திட்டம் உள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ.3ஆயிரம் வீதம் 100 ஏக்கருக்கு ரூ.3லட்சம் மானியம் வழங்க படுகிறது. இத்திட்டத்தில் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நிலப்பகுதி அவசியமாக இருக்க வேண்டும்.மானியம் பெற்ற தீவன பயிர் விவசாயிகள் குறைந்தது 3 ஆண்டுகள் அதை பராமரிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் ஆண்டுதோறும் 133பயனாளிகள் கலெக்டர் ஒப்புதல் மூலமாக தேர்ந்தெடுக்க படுகின்றனர் என்றார்.

