/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சிறை அங்காடியில் ரூ.1.20 லட்சத்திற்கு இனிப்புகள் விற்பனை

ADDED : நவ 04, 2024 07:22 AM
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கிளை சிறை அங்காடியில் ரூ.1.20 லட்சத்திற்கு சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மிட்டாய் வகைகள் விற்பனையானது.
திண்டுக்கல் மேற்கு தாலுகா ஆபிஸ் ரோட்டில் மாவட்ட கிளை சிறை உள்ளது. இங்கு 200க்கு மேலான விசாரணை கைதிகள் உள்ளனர். சிறை வளாகத்தில் சிறை அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் மதுரை மத்திய சிறையில் வாழும் ஏராளமான கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பொது மக்களுக்காக சலுகை விலையில் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது.
அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு,கார மிட்டாய் வகைகள்,தேங்காய் எண்ணெய்,கடலை எண்ணெய்,போர்வைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அக்.29 முதல் பொது மக்களிடம் விற்பனை செய்யப்பட்டது. குறைந்தவிலையில் வழங்கப்படுவதால் ஆர்வமாக திண்டுக்கல் நகரை சேர்ந்த மக்கள் இங்குள்ள பொருட்களை வாங்கி சென்றனர்.
3 நாட்கள் நடந்த வியாபாரத்தில் ரூ.1.20 லட்சத்திற்கு இனிப்பு,காரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையானது. 2023ஐ விட இந்த ஆண்டு 2 மடங்கு இனிப்புகள் விற்பனை அதிகரித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.