sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பஞ்சாமிர்த நகருக்கு வந்தது சோதனை 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்

/

பஞ்சாமிர்த நகருக்கு வந்தது சோதனை 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்

பஞ்சாமிர்த நகருக்கு வந்தது சோதனை 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்

பஞ்சாமிர்த நகருக்கு வந்தது சோதனை 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்


ADDED : ஆக 06, 2011 10:47 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பாலாறு பொருந்தலாறு அணை வறண்டதால், பழநியில் குடிநீர் பிரச்னை அபாயம் உருவாகியுள்ளது. அணையை பராமரிக்காததால் மழை நீர் தேங்க வழியின்றி வீணாகிறது. இதே நிலை நீடித்தால் குடிநீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும். பழநிக்கு பொருந்தலாறு அணை, தேக்கந்தோட்டம் கோடைகால நீர்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை, மாவட்டத்தில் அதிக பரப்பு உள்ளதாக இருந்தபோதும், பராமரிப்பில் பொதுப்பணி துறையினர் மெத்தனம் காட்டினர். இதனால் தடாகுளம் கண்மாய் 'ஷட்டர்' சேதமடைந்தது. இதை சீரமைப்பதிலும், அதிகாரிகளின் அலட்சியம் தொடர்ந்தது.வீணான மழை நீர்: சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் அணை நிரம்பியும், தண்ணீர் வீணாக வெளியேறியது.

தற்போது அணை முழுவதும் வறண்ட நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒரே வழி: இதனால், கோடைகால நீர்தேக்கத்தில் இருந்து மட்டுமே, நகருக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

நான்கு நாள்: இதுவரை ஓரிருநாள் இடைவெளியில், குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது நான்கு நாள் இடைவெளியில் தான் வினியோகிக்கப்படும் என, நகராட்சியினர் அறிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, தினமும் வந்து செல்லும் பக்தர்களும் குடிநீருக்கு பரிதவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணி துறையினரின் அலட்சியத்தால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், கடும் பாற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us