sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டிரான்ஸ்பார்மர் பழுது: அமைச்சர் விளக்கம்

/

டிரான்ஸ்பார்மர் பழுது: அமைச்சர் விளக்கம்

டிரான்ஸ்பார்மர் பழுது: அமைச்சர் விளக்கம்

டிரான்ஸ்பார்மர் பழுது: அமைச்சர் விளக்கம்


ADDED : ஆக 06, 2011 10:51 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''மின் கம்பம் விழுந்தாலும், டிரான்ஸ்பார்மர் பழுதானாலும் வாரியமே மாற்றி தரும். விவசாயிகள் செலவழிக்க வேண்டியதில்லை,'' என, அமைச்சர் விசுவநாதன் கூறினார்.விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.விவசாயிகள் கூறியது:

மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் பழுதானால், மின்வாரியம், விவசாயிகளிடம் பணம் வசூலிக்கிறது. இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படுவதற்கு எங்களிடம் பணம் வசூலிப்பது நியாயம் அல்ல, என்றனர்.பதிலளித்த அமைச்சர் விசுவநாதன், ''மழை காலங்களில் சாயும் மின்கம்பங்களையும், பழுதாகும் டிரான்ஸ்பார்மர்களையும் வாரியமே மாற்றும். தனியார் இடங்களில் உள்ள மின்கம்பங்களை மாற்ற பணம் கட்ட வேண்டும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us